தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு விளக்கமளிக்கப்பட்டு அவரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுவினைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ள இரா.சம்பந்தன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் டொனால்ட் ட்ரம்பை தெளிவுபடுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
BLOG COMMENTS POWERED BY DISQUS