இலங்கை
Typography

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குவது மற்றும் அதற்கு மாற்றாக புதிய சட்டமொன்றை கொண்டு வருவது தொடர்பில் ஐக்கிய நாடுகளுக்கு விளக்கமளித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.  

புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அந்த அரசியல் அமைப்பில் பயங்கரவாத தடைச் சட்டம் எவ்வாறு உள்வாங்கப்படவுள்ளது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அச்சுறுத்தல் மாற்றுக் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் அபிவிருத்தியானது உலகளாவிய ரீதியில் கருத்துக்களை வேகமாக செயல்படுத்துவதற்கும் பயங்கரவாத பிரிவுகளின் பயன்பாட்டை அவர்களின் நன்மைக்காக பயன்படுத்துவதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் அச்சுறுத்தலாக காணப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் இலங்கை சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புக்கான உயர்மட்ட கலந்துரையாடல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்