இலங்கை
Typography

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று புதன்கிழமை காலை 08.00 மணி முதல் 24 மணி நேர பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.  

தமது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளாதவிடத்து எதிர்காலத்திலும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக பிரிவு, ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை, டி சொய்சா பெண்கள் வைத்தியசாலை போன்ற சில வைத்தியசாலைகள் இயங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பாதகமான விடயங்கள் சிலவற்றுக்கு தாம் எதிர்ப்பு வெளியிட்டதாக சுட்டிக்காட்டிய சமந்த ஆனந்த, அது தொடர்பில் உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை எனவும் குறிப்பிட்டார்.  எனவே இவ்வாறு வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தாம் தீர்மானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்