இலங்கை
Typography

ஒரு வருடமாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

அவுஸ்திரேலியாவிலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மூலம், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக அவருக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டது.  இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார். 

வழக்கு விசாரணைக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  இந்த நிலையில், சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய குமார் குணரத்னத்தின் தண்டனைக் காலம் எதிர்வரும் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இன்று அவரை சிறையில் இருந்து விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்