இலங்கை
Typography

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு வடக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.  அத்தோடு, சபை அமர்வுகள் நாளை புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

வடக்கு மாகாண சபையின் 67வது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது சபை அமர்வு ஆரம்பமாக முன்பதாக நேற்றையதினம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு  இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

அதனையடுத்து சபை அமர்வுகள் பத்து நிமிடம் ஒத்திவைக்கப்பட்டு, வடக்கு மாகாண சபை அமர்வு மீண்டும் கூடி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றைய அமர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை சபை அமர்வு ஆரம்பமாகும் என அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். அதனை அடுத்து சபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS