இலங்கை
Typography

லங்கா ஈ நியூஸ் செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவை கைது செய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை சர்வதேச பிடிவிறாந்தை சர்வதேச பொலிஸார் நிராகரித்துள்ளனர். 

கம்பஹா பிரதம நீதவானால் சர்வதேச பொலிஸார் ஊடாக லங்கா ஈ நியூஸ் செய்தி இணையத்தளத்தின் ஆசிரியரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக விசாரணை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில்இ அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எந்தவொரு வழக்கும் நீதிமன்றில் சந்தருவான் சேனாதீரவுக்கு எதிராக பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்து சர்வதேச பொலிஸார், சிவப்பு எச்சரிக்கையை ஏற்க மறுத்ததுள்ளதாக குற்றப்புலானய்வு பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்