இலங்கை
Typography

2030 பேண்தகு அபிவிருத்தி நோக்கினை வகுப்பதற்காக அபிவிருத்தி செயற்பாட்டை வெற்றிபெறச் செய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. 

இந்த அமைச்சரவை உபகுழு ஐந்து அமைச்சரவை அமைச்சர்களையும் மாகாண முதலமைச்சர் ஒருவரையும் கொண்டிருக்கும். 2030 பேண்தகு அபிவிருத்தி நோக்கினை வகுப்பதற்காக அறிஞர் குழாமொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அதற்கமைய பேண்தகு அபிவிருத்தி உபகுழு மூன்று மாதத்துக்கொரு தடவை ஒன்றுகூடி அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அவற்றுக்குரிய விதந்துரைகளை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கும். அமைச்சரவை உபகுழுவுக்கு வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக ஒருங்கிணைப்பாளர் ஒருவர் ஜனாதிபதி செயலாளரால் நியமிக்கப்படுவார்.

2030 ஆண்டளவில் இலங்கை அடைய வேண்டிய அபிவிருத்தி மட்டத்தின் முன்னுரிமைகளை இனங்காணுதல், இலக்குகளை அடைவதற்கான காலவரையறையை தயாரித்தல், அந்த இலக்குகளை அடைவதற்காக அரச, தனியார் துறை மற்றும் சிவில் அமைப்புக்களுக்குரிய வகிபாகத்தை இனங்கண்டு, முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் போன்றவை இந்த அமைச்சரவை உபகுழுவின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, சமூக நியாயம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கிடையே தொடர்புகளை உருவாக்கி, அனைத்து பிரஜைகளுக்கும் நலன் கிட்டக்கூடியவாறு சமத்துவமான மற்றும் பேண்தகு அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இனங்காணப்பட்டுள்ள மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது நோக்கு அமைவாக 2015 – 2030 காலப்பகுதியினுள் வெற்றி பெறுவது அரசாங்கத்தின் விருப்பமாகும்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்