இலங்கை
Typography

தனது காதலி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக வெளியாகும் செய்திகளை கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ மறுத்துரைத்துள்ளார். 

“எனக்கு காதலியும் இல்லை. இல்லாத காதலி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறவும் இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்துவதில்லை. மாறாக, மோட்டார் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றார். எனக்கு காதலி கிடையாது. இதனால் அண்மையில் வீதிப் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்ட கூட்டு எதிரணி பாராளுன்ற உறுப்பினர் ஒருவரின் புதல்வி எனது காதலி கிடையாது என்று நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையின் மகள் பொலிஸாரினால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த பெண், நாமல் ராஜபக்ஷவின் இளைய சகோதரன் ரோஹித்த ராஜபக்ஷவின் காதலி என்று தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்