இலங்கை
Typography

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக, இலங்கை 58 விதமாக நிபந்தனைகளுக்கு உடன்பட்டதாக வெளியாக தகவல்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஸ்திரமான அபிவிருத்தி, மனித உரிமை காப்பு, நல்லாட்சி என்பவற்றை உருவாக்கியதன் பயனாகவே இழக்கப்பட்ட வரிச்சலுகை மீளக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையானது நாட்டிற்கு பங்கத்தை ஏற்படுத்தும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் விளைவாக பெறப்பட்டதல்ல என்று அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

இந்த வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றதோடு, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து இந்தப் பேச்சுக்களில் தெளிவுபடுத்தியதன் பின்னர் வரிச்சலுகையை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டதாவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை முஸ்லிம்கள் மீதான ஒடுக்கு முறைகளை உள்ளடக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதனால்தான் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் விருப்பம் தெரிவித்திருப்பதாக சில அரசியல்வாதிகளும், அமைப்புக்களும் ஒரு புறம் தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறத்தில் பேரினவாதக் குழுக்களும், சிங்கள அரசியல்வாதிகளும் ஸ்ரீலங்கா மீதான போர்க்குற்றம், மற்றும் இதர குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய சர்வதேச உதவியை ஏற்றுக்கொண்டதனால்தான் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க அந்த ஒன்றியம் நடவடிக்கை எடுத்ததாகக் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்