இலங்கை
Typography

மாகாணங்களில் எல்லை நிர்ணயம் தொடர்பில் நியமிக்கப்பட்ட, மாகாண எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் இறுதி அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. 

ஐவர் அடங்கிய குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த அறிக்கை, அதற்கு பொறுப்பான அமைச்சரான, உள்ளூராட்சிகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த அறிக்கை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா, அவ்வறிக்கையில் எழுத்துப் பிழைகள் தொடர்பில் ஆராய்ந்து, அதனை வர்த்தமானியில் பிரசுரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS