இலங்கை
Typography

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் நாட்டில் அனைத்து இனங்களுக்கும் தத்தமது தேசிய அடையாளங்களையும் மத, கலாசார அடையாளங்களையும் வெளிப்படுத்தக்கூடிய உரிமை மற்றும் சுதந்திரம் அவசியமானதாகும். அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து போராடியதாலேயே நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்ததெனவும் அவ்வாறே நாட்டையும் மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு டி.பி.ஜாயா மாவத்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முஸ்லிம் திணைக்கள கலாசார கட்டடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS