இலங்கை
Typography

மனித உரிமைகள் தொடர்பிலான செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘ஓரினச்சேர்க்கை குற்றமற்றது’ என்கிற உறுப்புரையை அனுமதிக்க முடியாது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சினாலேயே இந்த யோசனைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘ஓரினச்சேர்க்கை குற்றமற்றது’ என்ற உறுப்புரை உள்ளிட்ட சர்சைக்குரிய உறுப்புரைகளை நீக்கிவிட்டு, புதிய அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தாக்கல் செய்யுமாறு, ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்