இலங்கை
Typography

தமிழ் மக்கள் பிரிவினை கோரிக்கைகளை தற்போது கொண்டிருக்கவில்லை. ஆனால், தங்களின் தனித்துவம் பேணப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இலங்கை வந்துள்ள கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் டியோன் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தார். அங்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான வடக்கு மாகாண சபையின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “நாம், நாட்டின் ஒருமைப்பாட்டினை எதிர்க்கவில்லை. பிரிவினைக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனால், எமது தனித்துவம் பேணப்பட வேண்டும். இனம், மொழி, கலாசாரம், வாழ்க்கை முறை, ஏனைய மாகாணங்களில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கின்ற காரணத்தினால், எமது தனித்துவம் பேணப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்