இலங்கை
Typography

இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 106 ஓட்டங்களினால் இலங்கை வெற்றி பெற்றது.  

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது. 

 

இதன்பிரகாரம், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி - பல்லேகல மைதானத்தில் ஆரம்பித்து நடைபெற்று வந்தது.

 

முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 34.2 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்து 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 203 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. 

 

இரண்டாம் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் அதிரடியாகி துடுப்பெடுத்தாடி 176 ஓட்டங்களைப் பெற்றார்.  அதன்படி இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 353 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. 

 

பின்னர் 268 ஓட்டங்களை நோக்கி அவுஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.  எனினும், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல், அவுஸ்திரேலியா 161 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.

 

அதன்படி இலங்கை அணி 106 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியை இன்று சனிக்கிழமை வென்றுள்ளது. தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு, இந்த வெற்றி பாரிய உந்துசக்தியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்