இலங்கை
Typography

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் திருகோணமலையிலுள்ள இல்லத்துக்கு முன்னால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் கடந்த 16 தினங்களாகவே, கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனையின் முன்னே சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று மாலை அங்கிருந்து அகன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைரின் இல்லத்தின் முன்னால் திரண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென்றும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, இரா.சம்பந்தன் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரின் வருகையை எதிர்பார்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் காத்திருந்தனர். அத்தோடு, எதிர்க்கட்சித் தலைரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால், தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்