இலங்கை
Typography

“வன்முறையற்ற நெருக்குதல் மூலம் இலக்கை அடைய வேண்டும்“ என்று முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராடி வரும் மக்களுடான சந்திப்பின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

“தாயை பறித்துக் கொண்டு இன்னொரு பெண்ணை தருகிறேன், அதை தாயாக வைத்துக்கொள்ளுங்கள் என்று எப்படி கூற முடியாதோ, அப்படித்தான் உங்கள் பூர்வீகக் காணிகளை பறித்துவிட்டு வேறு காணிகளை வழங்க முடியாது. உங்களின் போராட்டம் நியாயமானது. அதனை நிறுத்தச் சொல்ல மாட்டேன்” என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரசாங்கத்திற்கு இராணுவத்தை வெளியேற்றும் எண்ணம் இல்லை என்று தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், போராட்டத்தின் மூலமே காணிகளை பெற முடியும். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அனைத்து தரப்பினருடனும் இது குறித்து பேசுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்