இலங்கை
Typography

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கப் போவதாக கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) கூறிவருவது வெற்றுக்கனவு என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், மீன்பிடித்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  

நான்கு வருடங்களுக்கு ஜனாதிபதிக்கே அரசாங்கத்தை கலைக்க முடியாது. அப்படியிருக்க, கூட்டு எதிர்க்கட்சியினருக்கு அரசாங்கத்தைக் “கவிழ்க்கும்" அதிகாரம் எங்கிருந்து கிடைத்தது? இது வெறும் பகல் கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு, கூட்டு எதிரணி செல்லும் பேரணிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்