இலங்கை
Typography

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 01) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ‘இன ரீதியான அநீதியை ஒழித்தல்’ தொடர்பிலான கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. 

இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான விவகாரம் எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் மீளாய்வு செய்யப்படவுள்ளது. 

 

இதில், இலங்கையின் சார்பில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதுடன், இலங்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளனர். அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின்  உயர் அதிகாரிகளும்  இந்தக் கூட்டத்  தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர். 

 

இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான  குழுவில்  177 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் அதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.  இதனிடையே, இலங்கை குறித்து மூன்று சிவில் சமூக நிறுவனங்கள் தமது சமர்ப்பணங்களை இன ரீதியான  அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவுக்கு கையளித்துள்ளன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்