இலங்கை
Typography

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டுச் சென்ற போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காப்பாற்றியதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நல்லாட்சி அரசாங்கம் என்று  தம்மைக் கூறிக்கொள்பவர்கள், எம்மீது அச்சம்கொண்டுள்ளனர். அதனால் தான், கூட்டு எதிரணியினது (மஹிந்த ஆதரவு அணி) பேரணியின் இறுதிக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்த கொழும்பு ஹைட் மைதானத்தில், அரசாங்கச் செலவில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கண்டியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த பேரணி, நான்காவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. அங்கு கருத்து வெளியிட்ட போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்