இலங்கை
Typography

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பேரணி ஆரம்பித்து நூறு மணித்தியாலத்துள் அரசாங்கம் பலத்த அழுத்தங்களைச் சந்தித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிரணியின் பேரணியின் இறுதி நாளான இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “கடந்த 4 நாட்கள் 100 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தப் பேரணி மூலம், அரசாங்கம் எந்தளவு அச்சத்துடன் உள்ளது என்பது, வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் மற்றும் செயற்படும் விதங்களில் தெளிவாகின்றன.  அடுத்த சில மணிநேரங்களில் எத்தகைய அழுத்தங்கள் ஏற்படும் என்பதைச் சொல்ல முடியாது.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS