இலங்கை
Typography

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேரணி சென்றவர்களில் குற்றவாளிகளும், பாதாளக் குழுவினருமே உள்ளடங்கியிருந்ததாக அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பேரணிகளுக்கும், தற்போது முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கும் பாரிய வேறுபாடு உள்ளதாகவும், இந்தப் பேரணி கேளிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ராஜித சேனாரத்ன இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கையானது ஆரம்பித்த இடத்திற்கே தற்போது வந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS