இலங்கை
Typography

‘பொட்டம் ட்ரோலிங்’ எனப்படுகின்ற ஆழ்கடலில் பாரிய அடிமடிகளைப் பயன்படுத்தி (இந்திய மீனவர்கள்) மீன்பிடிக்கும் முறையை தடை செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளமை தொடர்பில் இலங்கை தன்னுடைய வரவேற்பினை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பில் நன்றியை தெரிவித்து, ஜெயலலிதா ஜெயராமுக்கு கடிதம் ஒன்றை அனுப்ப தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

தடைசெய்யப்பட்ட குறித்த மீன்பிடி முறையால் இலங்கை கடல் வளம் சேதமடைந்துள்ளதாக, நாரா நிறுவனம் மேற்கொண்டுள்ள பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS