இலங்கை
Typography

காணாமற்போனோர் தொடர்பில் விடயங்களைக் கையாள்வதற்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டிய தேவைகள் இல்லை. அது, இலங்கைக்கு பொருத்தமானது அல்ல என்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, “இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அதன் படைகள் பயங்கரவாத இயக்குத்துக்கு எதிராக சட்டபூர்வமான யுத்தத்தை நடத்தி, அதில் வெற்றிக்கண்ட நாடு. இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த இலத்தீன் அமெரிக்கா நாடுகளிலேயே இந்த காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் இலங்கையில், காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பிலான மாதிரியுருவை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டிருப்பது பொருத்தமானதல்ல. ஆசியாவின் எந்த நாட்டிலும் போரின் பின்னரான இதுபோன்ற காணாமற்போனோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை நிறுவப்படவில்லை. ஜனநாயக நாடான ஸ்பெயினில் கூட இப்படி நடக்கவில்லை. 

அறம் சார்ந்த மனிதாபிமானம் என்ற வகையில், காணாமற்போனோர் தொடர்பாக தேடல் மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவால் செய்யப்பட்டுவிட்டது.  இதில் ஏதும் குறையிருப்பின் இந்த ஆணைக்குழுவின் பணியை புதுப்பித்து அல்லது மாற்றியமைத்து பணியை முன்னெடுக்கலாம். ஆனால், மங்கள பேசும் காணாமற்போனோருக்கான அலுவலகம் தொடர்பில் எந்த தருக்க சிந்தனைகளையும் காணவில்லை.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்