இலங்கை
Typography

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் ஏற்படுத்தி விட்ட பொருளாதார நெருக்கடிகளை நாட்டு மக்கள் தற்போது எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கை தற்போது 9000 மில்லியன் ரூபாய் கடனை தாங்கி நிற்பதால், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பொருளாதார நெருக்கடி நிலமையை புரிந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

எவ்வாறாயினும், இதுபோன்ற நெருக்கடியில் இருந்தாலும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களில் குறைகள் ஏற்படாது என்றும் நாட்டின் அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான பொருளாதார மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“மேடைகளிலும் பாதைகளிலும் விதவிதமாக பேசிச் சென்றாலும், கடந்த அரசாங்கத்தினால் நாட்டிற்குள் இழுத்துப் போடப்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமையை தற்போது பொதுமக்கள் தாங்க வேண்டியிருக்கின்றது.” என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS