இலங்கை
Typography

கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) அரசாங்கத்துக்கு எதிராக நடத்தியதாக கூறிய பேரணி, யானைக்கு நுளம்பு கடித்தது போன்றதே, நுளம்பு கடித்து யானைக்கு என்றைக்குமே வலித்ததில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். 

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் ஆட்களின் எண்ணிக்கையைவிட கூட்டு எதிரணியின் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கயந்த கருணாதிலக  மேலும் கூறியுள்ளதாவது, “கூட்டு எதிரணியென கூறிக்கொள்பவர்களின் போராட்டம் குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. பல்லாயிரக்கணக்கானவர்கள் களமிறக்குவதாக கூறியவர்கள், இறுதிக் கூட்டத்தை சிறியதொரு இடத்திலேயே நடத்தியுள்ளனர். போராட்டம் தோல்வி என்பது இதன் மூலம் உறுதியாகிறது.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்