இலங்கை
Typography

“எமது பிள்ளைகளின் உயிர்களைப்பற்றி அரசாங்கத்திற்கு அக்கறையே இல்லையா? பிள்ளைகளை விசாரணைக்காக இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும்போது நாங்கள் மட்டும்தானே கண்கண்ட சாட்சிகள்”என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி தங்களது ஏக்கத்தை வெளியிட்டுள்ளனர். 

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை 61வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்த அநீதியினை உலக நாடுகளுக்கு தொடர்ந்தும் வெளிப்படுத்தவே நாம் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றோம். சர்வதேச அழுத்தத்துடன் கூடிய விசாரணையே எங்களுக்குத் தேவை. இனியும் இந்த அரசாங்கத்தின் வார்த்தைகளை நம்பமாட்டோம். மாற்று அரசாங்கத்திற்காகவே இந்த அரசினை நம்பினோம். ஆனால் ஏமாற்றி விட்டார்களே”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்