இலங்கை
Typography

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வியாழக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.  

இதன்போது, கட்சியின் கட்டுப்பாட்டினை மீறி கூட்டு எதிரணி முன்னெடுத்த பேரணியில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, இன்றை கூட்டத்தில் மாற்றப்பட வேண்டிய தொகுதி அமைப்பாளர்கள் தொடர்பிலும், சுதந்திரக் கட்சியின் 65வது  ஆண்டு நிறைவு மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 02ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு நிறைவு தினமாகும். 1951ஆம் ஆண்டு செப்டெம்பர் 02ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்