இலங்கை
Typography

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் (அடிப்படை உரிமை தொடர்பான) சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) கைச்சாத்திட்டுள்ளார்.  

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலமொன்று சபாநாயகர் கைச்சாத்திட்டதை அடுத்து, அது உத்தியோகபூர்வமாக அமுலாகும் என்பது சம்பிரதாயமாகும். இதனையடுத்து, குறித்த சட்டமூலம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS