இலங்கை
Typography

தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 08ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. ஜனாதிபதியை நான் நம்புகின்றேன். நீங்கள் எங்களை நம்புங்கள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்குறுதி அளித்து உண்ணா விரதத்தினை நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியிருந்தார். 

ஆனால், இதுவரையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்க தமிழ் அரசியல் கைதிகள் முடிவு செய்துள்ளனர். குறித்த உண்ணாவிரத போராட்டம் சம்பந்தமான கடிதமும், சிறைச்சாலை ஆணையாளருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் கையளித்துள்ளனர். 

தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தற்போது வரைக்கும் மாறாத காரணத்தினாலும், வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்து விட்டதாகவும் அரசியல் கைதிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்