இலங்கை
Typography

கல்வி மேம்பாட்டுக்காக தேசிய கொள்கை ஒன்றை வகுக்கும் பொழுது மாகாண சபைகள் கொண்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன்வசப்படுத்திக்கொள்ளாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிதாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக பெருந்தொகை நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆசிரியர்களை இணைத்துக்கொண்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்படும். எதிர்காலத்தில் ஆசிரியர்களை பயிற்றுவித்து பாடசாலைகளில் ஈடுபடுத்தும் நடைமுறை முன்னெடுக்கப்படும்.” என்றுள்ளார்.

Most Read