இலங்கை
Typography

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதிலும் அரசாங்கம் முப்படையை வலுவூட்டும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றி வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

நாட்டின் அபிவிருத்தி, சுதந்திரம், ஜனநாயகம் தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு படை வலுவூட்டப்பட வேண்டும். இதற்காக புதிய தொழில்நுட்பம், உள்ளிட்டவற்றை மேம்படுத்தி உயர்தரத்திலான சேவையை வழங்கக்கூடிய நிலைக்கு அரசாங்கம் பாதுகாப்பு படையை தரம் உயர்த்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்ல படைவீரர் தூபிக்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தேசிய படைவீரர்கள் வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

Most Read