இலங்கை
Typography

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. 

பிரதமரினால் அறிமுகம் செய்யப்பட்ட ‘பலம் மிக்கதோர் இலங்கை- திட்டமிட்டதோர் பயணம்’ எனும் தொனிப்பொருளிலான பொருளாதார திட்டத்தின் கீழ் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. எதிர்வரும் பத்து வருடங்களுக்குள் அனைவரும் பயன்பெறும் வகையிலான புதிய பொருளாதாரத் திட்டம் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியாக பிரதமரின் இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அபிவிருத்தி கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவட்ட செயலக அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்