இலங்கை
Typography

யாழ்ப்பாணம் கீரிமலையில் புதிய மீன்பிடித் துறைமுகம் எதனையும் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  

இந்துக்களின் புனித தீர்த்தமாகக் கொள்ளப்படும் கீரிமலையில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அவ்வாறு கோவிலுக்கு அருகில் மீன்படித் துறைமுகைம் அமைக்கப்பட கூடாது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மஹிந்த அமரவீர, கீரிமலையில் மீன்படித் துறைமுகம் அமைப்பது தொடர்பான எந்த தீர்மானங்களோ, தயார்படுத்தல்களோ தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படவில்லை என்றும், வேறு தரப்பினரால் இச்செயற்பாடு இடம்பெறுகிறதா என்பது பற்றி தெரியாதென்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், வடக்கு மாகாண அபிவிருத்தியின் கீழ் அந்த மாகாணத்தின் முதலாவது மீன்படித் துறைமுகம் மற்றும் இலங்கையின் மிகப்பெரிய மீன்படித் துறைமுகம் பருத்தித்துறையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதுதவிர, யாழ்ப்பாணத்தின் குருநகர் பிரதேசத்தில் மற்றொரு மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்