இலங்கை
Typography

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் நீதி வழங்கப்பட வேண்டும் என்று கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட யுத்த காலத்தில் கணவனை இழந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். 

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2014ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து எனது கணவர் சுட்டு கொல்லப்பட்டார். மறவங்குளம் செல்லும் போது புதுக்குளம் பகுதியில் வைத்தது கணவர் கொலை செய்யப்பட்டார். கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்தால் மாத்திரமே சடலத்தினை தருவோம் என இராணுவம் தெரிவித்தது.

பல்வேறு சிரமத்தில் கணவரின் இறுதி கிரியைகளை கூட முறையாக செய்ய முடியாது போனது. கணவரை கொன்றவர்கள் இராணுவத்தினரே என கண்ணால் கண்டவர் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட எனது கணவருக்கு நீதிவேண்டும்.

கிளிநொச்சியில் வசிக்கும் எனது குடும்பம் பல்வேறு நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றது. கணவரை இழந்த நிலையில் கடும் கஸ்டத்தில் வாழ்கின்றோம். 3 பிள்ளைகளுடன் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றோம். சமுர்த்தி கூட எமக்கு வழங்கப்படவில்லை. நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் என்னை போன்று பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS