இலங்கை
Typography

இந்தியா வழங்கிய அழுத்தத்தின் பிரகாரமே கொழும்பு துறைமுக நகரத் திட்டம் அரசாங்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் பதிலளிக்க இந்திய தூதரகம் மறுத்துள்ளது.  

சீனாவின் பெரும் முதலீட்டில் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், கடந்த ஜனவரி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினை இடைநிறுத்தி வைத்திருந்தது. 

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ராஜித சேனாரத்ன, “இந்தியாவின் அழுத்தத்தினாலேயே துறைமுக நகரத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மீளாய்வும் செய்யப்பட்டது.” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பிலேயே இந்திய தூதரகம் கருத்து வெளியிட மறுத்துள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS