இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தென் கொரியா சென்றுள்ள அவர், அங்கு ஊடகமொன்றுக்கு பேட்டியளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு ஆதரவளித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் பழிவாங்கி வருவதாகவும், இதன்மூலம், கூட்டு எதிரணியை நெருக்கடிக்குள் ஆழத்தி வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட முக்கியஸ்தருமான சனத் நிசாந்தவின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு, கூட்டு எதிரணிக்கு அவர் வழங்கி வந்த ஆதரவே காரணம்.” என்றும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS