இலங்கை
Typography

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணை செயலாளர் சாள்ஸ் எச்.ரிவ்கின் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வருகின்றார். 

இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார். அத்துடன், வர்த்தக சமுகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியினால் ஆரம்பிக்கப்பட் ஆசியா உடனான இணைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த விஜயம் அமைந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க தினைக்களம் தெரிவித்துள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS