இலங்கை
Typography

கிளிநொச்சி பளையில் காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த மே மாதம் 19ஆம் திகதி நடைபெற்றிருந்த குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பின்னர் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், யாழ்ப்பாணம் உரும்பிராயில் வைத்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நேற்றுச் சனிக்கிழமை, சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்