இலங்கை
Typography

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாங்கள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து விளக்கமளித்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்துள்ளார். 

கே.சயந்தன், வ.கமலேஸ்வரன், அ.அஸ்மின், சு.பசுபதிப்பிள்ளை, இ.ஆனோல்ட், ச.சுகிர்தன் உள்ளிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினர்.

இதன்போது, முதலமைச்சருக்கு எதிராக தாங்கள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான காரணங்களையும் எடுத்துக் கூறியுள்ளனர்.

இதனிடையே, விடயங்களை சுமூகமாக அணுகுவது தொடர்பில் இரா.சம்பந்தன், குறித்த உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்