இலங்கை
Typography

பாராளுமன்ற ஒழுக்கத்தை மீறி பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பும் உறுப்பினர்களை எட்டு வாரங்களுக்கு தடை செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம் செய்யப்படவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளைத் திருத்தி, அது குறித்து தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துரையில் இடம்பெற்ற பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் வேலைத் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Most Read