இலங்கை
Typography

இலங்கை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பென் எமர்சன் வெளியிட்ட கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார். 

அத்துடன், போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தினை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பென் எமர்சன் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி இலங்கை வந்தார். அவர் தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அதன்போது, இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதில், சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமை தொடர்பிலான விடயங்களும் அடக்கமாகும். இந்த நிலையிலேயே, அவரின் கருத்துக்களை இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்