இலங்கை
Typography

வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சராக இருக்கும் பா.டெனிஸ்வரனை, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பதவிக்கு விந்தன் கனகரட்ணத்தை நியமிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கோரவுள்ளது. 

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகச் செயற்பட்டதன் மூலமும், நீதிவிசாரணைக்குழு முன் தோன்ற மறுப்பதன் மூலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் வடக்கு மாகாண அமைச்சராகவுள்ள பா.டெனிஸ்வரன் கட்சியின் முடிவுகளை மீறியிருந்தார் என்று அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்த நிலையிலேயே, அந்தக் கட்சியின் உயர்பீடம் அண்மையில் கூடி பா.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவிட்டு, அந்த இடத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிதிச் செயலாளரும் மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணத்தை நியமிக்குமாறும் கோரிக்கை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Most Read