இலங்கை
Typography

திருகோணமலை, மூதூரில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மனித உரிமை பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அக்ஷன்பாஃம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

அக்ஷன்பாஃம் அமைப்பினைச் சேர்ந்தவர்களே படுகொலை செய்யப்பட்டவர்களாவர். அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் நேற்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நீதியான விசாரணைகள் வேண்டும் என்று அக்ஷன்பாஃம் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி வெரோனிக் அன்டிரிக்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது,   "போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பொறிமுறையை ஏற்படுத்துவோம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம், குறிப்பிட்ட பொறுப்புக்கூறும் பொறிமுறை நம்பகத்தன்மைமிக்க - சட்ட ரீதியான - நீதியான தீர்வை வழங்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம், சரியான பாதையில் காத்திரமான நடவடிக்கைகளுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம், தற்போது செயற்பாடுகளுக்கான தருணம் வந்துவிட்டது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS