இலங்கை
Typography

வடக்கு மாகாண சபையின் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முக்கிய சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போதே, பா.டெனீஸ்வரனிடம் நேரடியாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா “மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்குவது குறித்து இன்று எமது இயக்கத்தின் தலைமைக் குழுவினால் கோரிக்கை விடப்பட்டிருக்கின்றது. இது குறித்து அமைச்சர் டெனீஸ்வரன் தனது முடிவினை நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். எனவே இதன் பின்னர் இது குறித்த முடிவுகள் எமது தலைமைக் குழுவினால் எடுக்கப்படும்.” என்றுள்ளார்.

Most Read