இலங்கை
Typography

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை செயற்பட வேண்டும். மாறாக, பிரிக்கும் வேலைகளை முன்னெடுக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சீ.யோகஸ்வரன் தெரிவித்துள்ளார். 

“இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பிரிந்து செயற்படுதல் என்பது, தமிழ் மக்களுக்கான தீர்வுப் பாதையில் மிகவும் கஸ்டமான நிலையை ஏற்படுத்தும்”, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, பார் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களுக்குள் ஏற்படும் பிளவுகளைப் பெரும்பான்மையினக் கட்சிகள் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. அது, துன்பங்களுடன் நொந்துபோயுள்ள தமிழ் மக்களை, மீண்டும் துன்பத்துக்குத் தள்ளிவிடும்.

தமிழ் மக்கள் பேரவை பிளவுபட்டு நிற்காமல், அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் ஒன்றாக இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஈ.பி.ஆர்.எல்.எப். விலகுவதால் எந்தப் பாதிப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படப்போவதில்லை. எனினும், சுரேஸ் பிரேமச்சந்திரன், தொடர்ந்தும் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வேண்டும்.”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்