இலங்கை
Typography

இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை உண்டாக்கும்  ஊசிகளைச் செலுத்த வேண்டிய தேவை ஏதும் அரசாங்கத்துக்கு இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டின் போது புற்றுநோயை ஏற்படுத்தும் ஊசி மருந்தொன்றை இராணுவம் பயன்படுத்தியதாக வடக்கு மாகாண உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டினை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டினை சர்வதேசத்தினர் வந்து பார்வையிட்டுச் சென்றதாக சுட்டிக்காட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான எவ்வித காரணமும் தமக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும், மீண்டும் நாட்டில் பிரச்சினையைத் தோற்றுவிப்பதற்காகவுமே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் ருவான் விஜயவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்