இலங்கை
Typography

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இளைப்பாறிய நீதிபதிகளைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மாகாண சபை அமர்வில் இது குறித்த பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஆதாரங்களுடனான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனாலும், அது தொடர்பில் இன்னமும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று வடக்க மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியான தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையிலேயே முதலமைச்சர், குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்