Monday, May 20th

Last update03:38:34 PM

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 43 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 43 பேர் இலங்கை பேருவளைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நேற்றிரவு இலங்கையின் பேருவளைப் பகுதியில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 7பேர் தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அதில் 8 பெண்களும் அடங்கியிருப்பதாக தெரியவருகிறது. மேலும் தப்பிச் சென்றோரின் விவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் குற்றத்தடுப்புப் பிரிவினர் கூறியுள்ளனர்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus