இலங்கை
Typography

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க  குற்றஞ்சாட்டியுள்ளார். 

அத்தனகலவில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவுக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ பெண்கள் உள்நுழைய தடை விதிக்கப்பட்ட கோவில் ஒன்றுக்கு உள்நுழைந்தார். இதனால் அந்தக் கோவில் பல வாரங்கள் மூடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இத்தகவலை சண்டே லீடரில் லசந்த விக்ரமதுங்க வெளியிட்டார். இதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்து அச்சுறுத்தல் விடுத்தார். இவ்வாறு அச்சுறுத்தப்பட்ட சில வாரங்களில் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டார். மஹிந்த ராஜபக்ஷ தனக்கு அச்சுறுத்தல் விடுத்த விடயம் குறித்து எனக்கு லசந்த  விக்ரமதுங்க தகவல் தெரிவித்தார்.” என்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்