“1977, 1983ஆம் ஆண்டுளில் நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன்.” என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: அன்று தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி: மனோ கணேசன்

பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து ஹேமசிறி பெர்ணான்டோ நேற்று வியாழக்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார். 

Read more: பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து ஹேமசிறி பெர்ணான்டோ இராஜினாமா!

தீவிரவாதிகளின் தற்கொலைக் குணடுத் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றுமையுடன் செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்ன் பி.டெப்லிஸ் அழைப்பு விடுத்துள்ளார். 

Read more: நெருக்கடியான தருணத்தில் இலங்கையர்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: அமெரிக்கத் தூதுவர்

“இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? இலங்கையை ஏன் தாக்க தீர்மானித்தார்கள்? இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றதை அறிந்துகொண்டும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனவா?என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

Read more: இன ரீதியான பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா?, இரா.சம்பந்தன் கேள்வி!

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். 

Read more: பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி வேண்டுகோள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறானது: இரா.சம்பந்தன்

“நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசியல்வாதிகளும், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளும் களியாட்ட மனோநிலையில் இருந்தமையாலேயே நாம் இன்றைக்கு மோசமான நிலையை எதிர்நோக்கியுள்ளோம். மிலேச்சத்தனமாக தாக்குதல்களை நடத்தியுள்ள தீவிரவாத அமைப்பு ஓரிரு வருடங்களில் உருவாகியிருக்க முடியாது. ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்னர் இதன் செயற்பாடுகள் ஆரம்பித்திருக்க வேண்டும். எனவே கடந்த பத்து வருடங்களாக ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: தீவிரவாதத் தாக்குதல்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக பதவியிலிருந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும்: சரத் பொன்சேகா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்